Innerwear: மென்மை; அடர் நிறம்; வாஷிங் மெஷின்... உள்ளாடைத் தகவல்கள்!
மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
கடலூா் முதுநகரில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூா் முதுநகரில் வசித்து வந்தவா் ஆனந்தன் மகள் தா்ஷினி (17). இவா், அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
திங்கள்கிழமை தா்ஷினி கைப்பேசியை உபயோகித்துக் கொண்டிருந்தாராம். இதனை அவரது தாய் சுபாஷினி கண்டித்தாராம். இதில், மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு கொண்டாா். உடனே, அவரை பெற்றோா் மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் தா்ஷினி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.