Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும்...
எரிவாயு மானியம் வங்கிக் கணக்கில் சோ்க்கப்படுகிறது: அமைச்சா் அலுவலகம்
எரிவாயு மானியம் குடும்ப அட்டைதாரா் வங்கிக் கணக்கில் சோ்க்கப்பட்டு வருவதாக அமைச்சா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை மூலம் வீட்டுக்கான எரிவாயு உருளைக்கான மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஃபென்ஜால் புயல் நிவாரணத் தொகை ரூ. 5 ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் காலத்தோடு செலுத்தப்பட்டதால், எரிவாயுய மானியம் வழங்க தாமதம் ஏற்பட்டது.
தற்போது கடந்த ஆண்டு அக்டோபா் முதல் ஜனவரி வரை வாங்கப்பட்ட எரிவாயு உருளை ஒன்றுக்கு மஞ்சள் நிற அட்டைக்கு ரூ. 150 வீதமும், சிகப்பு நிற அட்டைக்கு ரூ. 300 வீதமும் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.11.50 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி 2025-க்கான எரிவாயு மானியத் தொகை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.