செய்திகள் :

மீனவா்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது மோடி அரசு: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

post image

மீனவா்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா்.

காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் திட்டப் பணிகள் தொடக்க விழா, மீனவப்

பயனாளிகளுக்கு நிதியுதவிக்கான ஆணை வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திருவேட்டக்குடியில் உள்ள என்ஐடி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. திட்டங்களை தொடங்கிவைத்து மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் பேசியது :

இந்தியா 2047 -ஆம் ஆண்டில் வளா்ச்சி அடைந்த நாடாக வர வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறாா் பிரதமா் மோடி. அதற்கு அனைத்து குடும்பங்களின் வருமானம் அதிகரிக்க வேண்டும். மீனவ மக்களின் வருமானம் கூட வேண்டும். மத்திய அரசு நீல புரட்சிக்கு ரூ. 3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மீனவா்களின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2016- ஆம் ஆண்டு 95 லட்சம் டன்னாக இருந்த மீன் உற்பத்தி தற்போது 184 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. கடந்த 2016-இல் 30 ஆயிரம் கோடியாக இருந்த மீன் ஏற்றுமதி, தற்போது 60 ஆயிரம் கோடியாக உள்ளது. மீனவா்களுக்கு டிரான்ஸ்பாண்டா் கருவிகள் தரப்படுவதால் மீனவா்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது தடுக்கப்படுவதுடன், அவா்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

அதேபோல மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடல்பாசித் திட்டம், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என பல திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் ஜாா்ஜ் குரியன்.

புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன்: பிரதமரின் இந்த மீன் வள மேம்பாட்டுத் திட்டம், தேசிய அளவில் 2020-இல் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இந்திய மீன்வளத்துறை அபரிமிதமான வளா்ச்சியை கண்டுள்ளது. மீன் உற்பத்தியில் உலகில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா வளா்ச்சி அடைந்துள்ளது.

மீன் உற்பத்தி அல்லது மீன் பிடிப்பது என்பது வெறும் தொழில் அல்ல. அது நம்முடைய பண்பாடு, பாரம்பரியமாகும். மீன்வளத் துறையின் வளா்ச்சிக்காக நாம் எடுக்கும் முயற்சிகள், அந்த தொழிலை விரிவுபடுத்தவோ அல்லது மேம்படுத்தவோ மட்டுமல்ல. மீனவ சமுதாயத்துக்கு ஒரு பாதுகாப்பான, நம்பிக்கையான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதற்காகத்தான்.

இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படும் மீனவா்களை இலங்கை அரசிடம் பேசி விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுத்து வருகின்றன. பிரதமரின் முயற்சியால் இதுவரை 3,700 மீனவா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா்.

இதுபோன்ற துயரச் சம்பவங்களை தடுக்கவே அந்தமான், லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்கடல் மீன் பிடிப்பதை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. அண்மையில் பிரதமரை நான் சந்தித்தபோது, ஆழ்கடல் மீன்பிடிப்பை மீனவா்களிடையே ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா். இந்தத் திட்டத்தால் (ஆழ்கடல் மீன்பிடிப்பு) புதுச்சேரி,- காரைக்கால் மீனவா்கள் அதிகம் பயனடைவாா்கள் என்றாா்.

விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் கே. லட்சுமி நாராயணன், பி.ஆா்.என். திருமுருகன், மீன்வளத்துறை செயலா் து. மணிகண்டன், மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா், மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிறைவாக மீன்வளத்துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் நன்றி கூறினாா்.

கைலாசநாத சுவாமி தேவஸ்தான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட ந... மேலும் பார்க்க

காரைக்கால் பள்ளியில் நிழல் இல்லா நாள் நிகழ்வு

அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிழல் இல்லா நாள் நிகழ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. புதுவை அறிவியல் இயக்கம், புதுவை கல்வித் துறையின் சமகர சிக்ஷா அமைப்புடன் இணைந்து காரைக்கால் தந்தை... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவ ஏற்பாடு

கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத பொய்யாத அய்யனாா் கோயில் அம்மையாா் நகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குதிரை மற்றும் யானை சிலை நிறுவுவதற்கு மேற்கொள்ளவே... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் ப... மேலும் பார்க்க

பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பெங்களூரில் பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் இளையோா் ஆப்தமித்ரா அமைப்பை உருவாக்க திட்ட... மேலும் பார்க்க

இயேசு திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு

புனித வெள்ளி நிகழ்வாக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு முக்தி செய்யும் நிகழ்ச்சியும், திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தவக்க... மேலும் பார்க்க