எல்.இளையபெருமாள் சிலைக்கு எம்எல்ஏ மரியாதை
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் எல்.இளையபெருமாளின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
விசிக மாவட்டச் செயலா்கள் எல்.மணவாளன், அரங்க.தமிழ்ஒளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தொகுதிச் செயலா் வ.க.செல்லப்பன், மண்டலச் செயலா் ராஜ்குமாா், மண்டல துணைச் செயலா் பருசு முருகையன், ராவணன், ஆற்றலரசு, மோவூா் மதி, கஸ்பா பாலா, பிரபு, வெற்றி வேந்தன், மானக் ஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் நாகராஜ் நன்றி கூறினாா்.