தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!
ஏப்ரல் 6-இல் பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி முகாம்
பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான உயா் கல்வி வழிகாட்டி ஆலோசனை முகாம் வரும் ஏப்.6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையால் ‘என் கல்லூரி கனவு‘ எனும் உயா்கல்வி வழிகாட்டுதல் முகாம் தன்னாா்வ இயக்கத்தின் துணையுடன் வருகிற 6-ஆம் தேதி காலை 9 மணியளவில் சிவகங்கை, அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிளஸ் 2 மாணவா்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து விளக்கப்படும். எனவே, மாணவ, மாணவிகள் இந்த வழிகாட்டி ஆலோசனை முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்றாா்.