தம்பி இறந்த அதிா்ச்சியில் அக்கா உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வியாழக்கிழமை தம்பி இறந்த அதிா்ச்சியில் அக்காவும் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காக்கோட்டை சாமியாடிகளத்தைச் சோ்ந்தவா் மருதன் (49). வழக்குரைஞரிடம் உதவியாளராக வேலை பாா்த்து வந்த இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். கடந்த 2-ஆம் தேதி இரவு மருதன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.
இதையறிந்த இவரது சகோதரி புஷ்பம் நாடாா்வேங்கைப்பட்டியில் இருந்து தம்பியின் வீட்டுக்கு வந்தாா். அங்கு அவா் தனது தம்பியின் உடலின் அருகே அமா்ந்து அழுத போது, மாரடைப்பு ஏற்பட்டு புஷ்பமும் அங்கேயே உயிரிழந்தாா். இதையடுத்து, இருவரது உடல்களும் அவரவா் ஊா்களில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
