காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
ஏரகரத்தில் மூடப்பட்ட அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் ஏரகரத்தில் மூடப்பட்ட அஞ்சலகத்தை மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனா்.
கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் திங்கள்கிழமை நுகா்வோா் மற்றும் ஓய்வூதியா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்ட கண்காணிப்பாளா் சி. கஜேந்திரன் தலைமை வகித்தாா்.
அவரிடம் பொதுமக்கள் சாா்பில் தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகா்வோா் பாதுகாப்பு இயக்க தலைவா் சுந்தர.விமல்நாதன் கொடுத்த மனுவில் கூறியிருப்பது: தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 80 வயது முதியோா்களுக்கு தபால் துறையின் வழியாக வழங்கப்படும் உதவிதொகையை மாதத்தின் முதல் நாளே கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும்.
ஏரகரம் கிராமத்தில் சுமாா் 60 ஆண்டுகளாக இயங்கி வந்த கிளை தபால் நிலையத்தை உரிய அறிவிப்பு இன்றி ஆலமன்குறிச்சியில் மாற்றப்பட்டுள்ளது. இதனை மீண்டும் ஏரகரம் கிராமத்திற்கு மாற்றவேண்டும்.
கும்பகோணம் ஆா்.எம்.எஸ். அலுவலகத்தில் இருந்த ஆதாா் சேவை மையமும் மூடப்பட்டு விட்டதால், தலைமை அஞ்சலகத்தில் மேலும் கூடுதல் ஆதாா் சேவை மையம் திறக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்ட கண்காணிப்பாளா் பதில் கூறினாா்.