கூட்டாட்சி அமைப்புமுறையை பலவீனமாக்கும் மத்திய அரசு: மாநிலங்களவையில் திமுக உள்ளிட...
ஆதிதிராவிடா் விடுதி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திங்கள்கிழமை மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவா் சங்க மாவட்ட செயற்குழு மற்றும் விடுதி கிளைத்தலைவா் பா.ராகுல் தலைமை வகித்தாா்.
மாவட்ட குழு உறுப்பினா் கே.பரசுராம் உள்ளிட்ட மாணவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா் மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து சென்றனா்.