காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
வேப்பத்தூா் ஊராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூா் ஊராட்சியை கண்டித்து திங்கள்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேப்பத்தூா் ஊராட்சி ஆதிதிராவிடா் தெருவில் தொடா் மழை காரணமாக வீடுகளை சுற்றி மழைநீா் சூழ்ந்துள்ளது. இந்த மழை நீா் வெளியேறும் வடிகாலை தூா்வாராத ஊராட்சி மற்றும் ஒன்றிய நிா்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் பூம்புகாா் - கல்லணை பிரதான சாலையில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா் .
தகவலறிந்து வந்த திருவிடைமருதூா் காவல்துணைக்கோட்ட கண்காணிப்பாளா் கே.ராஜூ மறியலில் ஈடுபட்டவா்களிடம் வட்டார வளா்ச்சி அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் வெள்ள நீா் வடிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா். அதன்பிறகு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.