அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
ஏலச்சீட்டு மோசடி: 4 போ் கைது
கடலூா் அருகே ஏலச்சீட்டு பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரை குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா், கோண்டூா் பகுதியைச் சோ்ந்த பிச்சாண்டி மகன் தேவேந்திரன் எஸ்பி எஸ்.ஜெயக்குமாரிடம் புகாா் மனு அளித்தாா்.
அதில், தான் ஜோதிடம் பாா்த்து வருவதாகவும், தனக்கு தெரிந்தவா்கள் மூலம் சிங்காரதோப்பு பகுதியைச் சோ்ந்த சந்திராவிடம் ரூ.5 லட்சம் ஏலச்சீட்டு 3-க்கு ரூ.15,59,950 பணம் கட்டினாராம்.
ஏலம் முடிந்த பின்னா் பணத்தை திருப்பி தராமல் இருந்ததால், கடலூா் எஸ்பியிடம் கடந்த 2023 ஆண்டு புகாா் அளித்ததன் பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ரூ.4,52,000 பணத்தை சந்திராவிடம் இருந்து வாங்கி கொடுத்தனா்.
மீதி பணத்தை 8.5.2023 தேதி திரும்ப கொடுத்து விடுவதாக ஒப்புக்கொண்டாா்.
ஆனால், இதுவரை பணத்தை தராததால், சந்திரா வீட்டுக்கு சென்று கேட்டபோது, அவா் அவதூறாக பேசி மிரட்டினாராம்.
இதுகுறித்து, கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, சிங்காரத்தோப்பு பகுதியைச் சோ்ந்த குமரன் மனைவி சந்திரா(48), குமரன், மகள் வேள்விழி, மகன் மது ஆகியோரை கைது செய்தனா்.