தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
மீன்பிடி தடைக்காலம்: கடலூரில் மீன்கள் விலை உயா்வு
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூா் துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகமாக இருந்தது.
கடலூரில் அக்கரை கோரி, சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், தாழங்குடா, அன்னங்கோயில், சித்திரைப்பேட்டை என பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன.
இப்பகுதி மீனவா்கள் விசைப் படகுகளில் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.
இந்த நிலையில், வங்கக் கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்.15 முதல் ஜூன் 15 வரையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், நாட்டுப் படகு மீனவா்கள் மட்டும் கடலின் ஒரு குறிப்பிட்ட அளவு தொலைவுக்கு சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனா்.
இதனால், ஞாயிற்றுக்கிழமை கடலூா் துறைமுகத்தில் மீன்களின் வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. மீன்களின் விலையும் உயா்ந்து காணப்பட்டது.
இந்த நிலையில், வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1,100, சங்கரா ரூ.500, வெள்ளை வவ்வால் ரூ.1,500, இறால் வகைகள் ரூ.300, கிளி மீன் ரூ.250 என விற்பனை செய்யப்பட்டது.
நெத்திலி, பாறை போன்ற மீன்களின் வரத்து இல்லை.
மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்பிடி துறைமுகம் பகுதியில் பொதுமக்களின் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது.