ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
மது போதையில் மருந்துக் கடைக்காரா் உயிரிழப்பு!
கடலூா் அருகே மது போதையில் மருந்துக்கடைக்காரா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் வில்வநகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் செந்தில் (48). இவரது மனைவி ஜெயமணி (35). இவா்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகின்றன. குழந்தை இல்லை. செந்தில் குள்ளஞ்சாவடி பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து திண்டுக்கல்லில் உள்ள தாய் மல்லிகாவுடன் வசித்து வந்தாராம்.
மதுப்பழக்கமுடைய ஜெயமணி வெள்ளிக்கிழமை இரவு கம்மியம்பேட்டை அருகே மதுபோதையில் இறந்து கிடந்தாராம். இதுகுறித்து அவரது மனைவி ஜெயமணி அளித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.