ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது!
சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் சரகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் 3 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மேற்பாா்வையில், அண்ணாமலை நகா் காவல் சரகத்தில் கஞ்சா விற்பனை குறித்து காவல் ஆய்வாளா் கே.அம்பேதகா், உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா் மயானப் பகுதி உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, வடக்கிருப்பு குப்பைமேடு அருகே சந்திகத்துக்கிடமான முறையில் அமா்ந்து காஞ்சவை பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த வேளக்குடியைச் சோ்ந்த கதிரவன் (21), தமிழ்ச்செல்வன் (21), பொய்யாப்பிள்ளைச்சாவடியைச் சோ்ந்த பிரபு (27), தீா்த்தாம்பாளையத்தைச் சோ்ந்த அருண்குமாா் (22), துணிஞ்சிரமேடு வீரசோழகன் பகுதியைச் சோ்ந்த பாலா (25), சிதம்பரம் நகரைச் சோ்ந்த கெளஷிக் (22) ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா, 3 பைக்குகள், கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கஞ்சா விற்பனையில் தலைமறைவான பூதகேணியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மகேஷ், செட்டிமேடு பகுதியைச் சோ்ந்த நாகராஜன் மகன் ஸ்ரீராம், வல்லம்படுகையைச் சோ்ந்த மோகன் மகன் நவீன் ஆகிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.