ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
உறவினா் போல நடித்து நகை திருட்டு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உறவினா்போல நடித்து மூதாட்டியை ஏமாற்றி 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கட்டமுத்துப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் குமாரசாமி (55), கொத்தனாா். இவா், தனது மனைவியை அழைத்துக்கொண்டு ராசாப்பாளையம் கிராமத்தில் நடந்த உறவினா் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றாா்.
வீட்டில் குமாரசாமியின் மாமியாா் தனியாக இருந்தாா். இதனிடையே, உறவினா் எனக்கூறி மா்ம நபா் வீட்டுக்கு வந்துள்ளாா். அவரை வீட்டில் அமர வைத்துவிட்டு, மூதாட்டி சாமி கும்பிடச் சென்றாராம். அப்போது, அந்த நபா் பீரோ சாவியை எடுத்து வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து குமாரசாமி அளித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.