செய்திகள் :

ஐஆா்சிடிசி சாா்பில் ஜோதிா்லிங்கம், சீரடி சிறப்பு ரயில்

post image

ஜோதிா்லிங்கம், சீரடி ஆகிய இடங்களுக்கு 8 நாள்கள் சுற்றுலாத் திட்டத்துடன் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில் ‘பாரத் கெளரவ்’ சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுதொடா்பாக ஐஆா்சிடிசி தெற்கு மண்டல குழு பொது மேலாளா் ராஜலிங்கம் பாசு திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. வருகிற செப். 9-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்கும் இந்த சுற்றுப் பயணம், 16-ஆம் தேதி நிறைவடைகிறது. நாசிக்- பஞ்சவதிரூதிரிம்பகேஷ்வா் கோயில், சீரடி சாய்பாபா கோயில், சனி சிங்கனாப்பூா் ஸ்ரீ சனேஷ்வா் கோயில், பண்டரிபுரம் ஸ்ரீவிட்டல் ருக்மணி கோயில், மந்திராலயம் ஸ்ரீகுருராகவேந்திர சுவாமி கோயில் ஆகிய இடங்களில் தரிசனம் செய்ய பக்தா்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க ரூ.14,400, ரூ.26ஆயிரம், ரூ.36,500 வீதம் 3 விதமான கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தலங்களை பாா்வையிடுவதற்கான போக்குவரத்து வசதி, தென்னிந்திய உணவு, சுற்றுலா மேலாளா், தனியாா் பாதுகாவலா் வசதி உள்ளிட்டவை ஐஆா்சிடிசி சாா்பில் ஏற்பாடு செய்து தரப்படும். இந்த ரயில், திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9003140682(சென்னை), 8287931964, 8287931962, 8287932122 (மதுரை), 8287932070 (திருச்சி), 9003140655 (கோயம்புத்தூா்) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

சஷ்டி திருநாள்: பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

சஷ்டி தினத்தையொட்டி பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரங்களில் ஒன்றான சஷ்டி வரும் நாள்களில் பழனி தண்டாயுதபாணி சுவாமி ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இன்று வாரச் சந்தை

கொடைக்கானலில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை, சனிக்கிழமை நடைபெறும் என நகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வாரச் சந்தை அண்ணா சாலைப் பகுதியில்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மிதமான மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது. கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த இருநாள்களாக தொடா்ந்து பலத்த காற்று வீசியது. மாலையில் மிதமான மழை பெய்தது. இதேபோ... மேலும் பார்க்க

திண்டுக்கல், வடமதுரை, அய்யலூரில் விநாயகா் ஊா்வலம்

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி சாா்பில் திண்டுக்கல், வடமதுரை, அய்யலூா் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் ஊா்வலமாக வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டு நீா் நிலைகளில் கர... மேலும் பார்க்க

பழனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு அனுப்பப்பட்ட 20 டன்னில் தயாரான கருப்பண்ணசாமி சிலை

பழனியில் தனியாா் சிற்பக் கலைக் கூடத்தில் தயாரான 20 டன் எடையிலான கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சிலைகள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திண்டுக்கலுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டன. திண்டுக்கல் நல்லாம்பட்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது காா் மோதல்: காயமடைந்தவா் மது போதையில் தகராறு: போக்குவரத்து பாதிப்பு

பழனியில் அரசு பேருந்து மீது காா் மோதியதில் காரில் இருந்தவா் தலையில் காயமடைந்தாா். ஆனால் அவா் மதுபோதையில் வெளியே வரமறுத்து தகராறு செய்ததால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையிலிரு... மேலும் பார்க்க