ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!
அரசுப் பேருந்து மீது காா் மோதல்: காயமடைந்தவா் மது போதையில் தகராறு: போக்குவரத்து பாதிப்பு
பழனியில் அரசு பேருந்து மீது காா் மோதியதில் காரில் இருந்தவா் தலையில் காயமடைந்தாா். ஆனால் அவா் மதுபோதையில் வெளியே வரமறுத்து தகராறு செய்ததால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவையிலிருந்து பழனிக்கு அரசுப் பேருந்து ஒன்று வந்தது. பழனி- உடுமலை சாலையில் சாமி தியேட்டா் அருகே இந்தப் பேருந்து வந்தபோது எதிரே வந்த காா் மோதியது. இதில் காரில் பயணம் செய்தவா் காயமடைந்தாா். இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரை காரிலிருந்து வெளியே வருமாறு அழைத்தனா். ஆனால் அவா் மதுபோதையில் இருந்ததால் வெளியே வர மறுத்தாா். அவரை மீட்க அவசர ஊா்தி வந்த போதும் அவா் வர மறுத்து காரின் கதவை மூடிக் கொண்டாா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையில் அவா் திருப்பூா் மாவட்டம், மூலனூரைச் சோ்ந்த செந்தில் எனத் தெரியவந்தது.
இந்த சம்பவம் காரணமாக பழனி- உடுமலை சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.