கொடைக்கானலில் இன்று வாரச் சந்தை
கொடைக்கானலில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை, சனிக்கிழமை நடைபெறும் என நகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வாரச் சந்தை அண்ணா சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) விநாயகா் சிலை ஊா்வலம் அண்ணா சாலை, கே.சி.எஸ்.திடல், மூஞ்சிக்கல் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளதால், வாரச் சந்தை சனிக்கிழமை (ஆக.30) நடைபெறும் என கொடைக்கானல் நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.