செய்திகள் :

ஒன் பை டூ

post image
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க

“ ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அரசியல்வாதியான தம்பி விஜய்யின் சிறுபிள்ளைத்தனமான கருத்துதான் இது. இதில் அவரது அரசியல் தெளிவின்மைதான் அப்பட்டமாகத் தெரிகிறது. பா.ஜ.க-வின் செயல் தலைவராகச் செயல்பட்டுவரும் ஆளுநர், தமிழர்களுக்கு எதிராக விஷமக் கருத்துகளைத் தொடர்ந்து பரப்பிவருகிறார். மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களைக் காலவரையறையின்றி கிடப்பில் போட்டு, அரசுக்குக் குடைச்சல் கொடுக்கிறார். ஒன்றிய பா.ஜ.க அரசின் புள்ளிவிவரங்கள் அனைத்துமே தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதைச் சொல்கின்றன. ஆனால், இந்த ஆட்சியின் சிறப்பை ஒப்புக்கொள்ள மனமின்றி, தனது உரையைக்கூடப் படிக்காமல், திட்டமிட்டு ஒரு நாடகத்தை நடத்தி சட்டமன்ற அவையிலிருந்து வெளியேறுகிறார் ஆளுநர். இதுபோலத் தொடர்ந்து தனது பதவிக்கு ஒவ்வாத அரசியலைச் செய்துவரும் ஆளுநரைக் கண்டிக்காமல், போகிற போக்கில் இரண்டும் கெட்டான்போலக் கருத்து சொல்வது தம்பி விஜய்க்கு அழகல்ல. அரசியல்ரீதியாகக் கருத்து சொல்லும்போது எது சரி, எது தவறு என்று நேர்மையாகச் சொல்ல, ஓர் ஆன்ம பலம் வேண்டும். அது தம்பி விஜய்க்கு இருக்கிறதா என்பதை அவரே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்!”

வீர விக்னேஷ்வரன்

வீர விக்னேஷ்வரன், செய்தித் தொடர்பாளர், த.வெ.க

“தலைவர் விஜய் பேச்சு உண்மைதானே... பொன்விழா கண்ட தமிழக சட்டமன்றத்துக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. அதைக் குலைக்கும்விதமாக ஆளுநர் நடந்துகொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் தேர்வுசெய்த அமைச்சரவை அனுப்பிய கோப்புகளைக் கிடப்பில் போட்ட ஆளுநரின் செயல்பாடுகள் எப்படிக் கண்டிக்கத்தக்கவையோ, அதேபோல, தி.மு.க-வின் செயல்பாடுகளும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையே. ஆனால், ஆளுநருக்கும் ஆளும் அரசுக்கும் இது போன்ற காரணங்களால் தொடர்ந்து நடக்கும் உரசல், மோதல்களால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை... இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்பதைத்தான் எங்கள் தலைவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதோடு, நாங்கள் அரசியலுக்குள் நுழையும்போதே பா.ஜ.க எங்களின் கொள்கை எதிரி, தி.மு.க எங்கள் அரசியல் எதிரி என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டோம். பா.ஜ.க மட்டுமல்ல, மக்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் யாராக இருந்தாலும் அவர்களை வெளிப்படையாகக் கண்டிக்கும் தைரியமும் எங்களுக்கு உண்டு. நாடக அரசியல் செய்துகொண்டிருக்கும் தி.மு.க., அதை விட்டுவிட்டு இனியாவது மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். 2026-ல் அது அவர்களுக்கே புரிந்துவிடும்!”

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு; யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதி இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் எ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பின்வாங்கிய காங்கிரஸ்; களமிறங்கும் திமுக; வேட்பாளர் யார்?

ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். அதனால், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவ... மேலும் பார்க்க

அதிமுக உரிமை வழக்கு: இபிஎஸ்ஸுக்கு எதிராக புதிய வழக்கைத் தொடுத்த புகழேந்தி; காரணம் என்ன?

அதிமுக உட்கட்சி விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் தடை ஆணையை நீக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வா.புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளது அ.தி.மு.க வட்டாரத்தில் மீண... மேலும் பார்க்க

'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்தகை திடீர் அறிக்கை

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ... மேலும் பார்க்க

RAID-க்கு பிறகு சட்டமன்றத்தில் தனி ரூட்டெடுக்கும் துரைமுருகன்? | கைதாவாரா Seeman? | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* சட்டமன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இல்லாததற்கு துரைமுருகன் கண்டனம்!* திண்டுக்கல் அதிமுக எம்எல்ஏ சீனிவாசன், சட்டமன்றத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாப... மேலும் பார்க்க