செய்திகள் :

ஒரே ஆண்டில் ரூ. 1300 கோடி முதலீடு.... அசத்தும் சன் பிக்சர்ஸ்!

post image

சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து வருகிறது.

பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவில் பான் இந்திய கலாசாரத்தை விரிவுபடுத்தியதுடன் அதன் வணிக வெற்றியைக் காட்டி பல மொழிகளிலிருந்தும் அதிக பட்ஜெட் படங்களைத் தயாரிப்பதற்கான நம்பிக்கையை விதைத்தது.

இதனால், கன்னடத்தின் கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் கேஜிஎஃப் , கேஜிஎஃப் - 2 படங்களைத் தயாரித்ததுடன் ரூ. 1500 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றனர்.

பின், ஆந்திரத்தைச் சேர்ந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் புஷ்பா - 1 மற்றும் புஷ்பா - 2 ஆகிய படங்களில் பட்ஜெட்டை வாரி இறைத்து ரூ. 2400 கோடிக்கும் அதிகமான வணிகத்தைச் செய்து உலகளவில் கவனத்தை ஈர்த்தனர்.

அந்தப் பட்டியலில் தற்போது தமிழிலிருந்து கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி திரைப்படம் ரூ. 400 கோடியிலும், ரஜினி - நெல்சன் இணையும் ஜெயிலர் - 2 படத்தை ரூ. 300 கோடியிலும், இந்தியாவே எதிர்பார்க்கும் அட்லி - அல்லு அர்ஜுன் படத்தை ரூ. 600 கோடியிலும் தயாரிக்க ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட ரூ. 1300 கோடி வரை சினிமா தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் முதலீடு செய்துள்ளது.

கலாநிதி மாறனுடன் அட்லி, அல்லு அர்ஜுன்.

இவற்றில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களை ஒரு தமிழ்த் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் பான் இந்திய சினிமாக்கள் என்பதால் இதன் வணிகங்கள் பெரிதாக நடக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் - 1, ராயன் ஆகிய படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சினிமாவில் பான் இந்தியா கலாசாரம் அசிங்கமானது: செல்வராகவன்

எம்புரான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

எம்புரான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சன... மேலும் பார்க்க

சச்சின் திரைப்படம் நாளை மறுவெளியீடு!

விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் நாளை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவே... மேலும் பார்க்க

சூரியின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகர் சூரி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுதலை படத்திற்குப் பிறகு முழுநேர கதாநாயகனாக மாறிவிட்டார் நடிகர் சூரி. அதன் பின்னர் வெளியான கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இயக்குநர் அமீத் கோலானி இயக்கத்தில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் உள்ளிட்டோர் நடித்து வெளியான லாக் அவுட் திரைப்படம் ஜ... மேலும் பார்க்க

காதலரைக் கரம்பிடித்தார் அபிநயா!

நடிகை அபிநயா தன் காதலரைத் திருமணம் செய்துகொண்டார்.சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்த ‘நாடோடிகள்’ படத்தில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அபிநயா, ஈ... மேலும் பார்க்க