செய்திகள் :

ஒரே நாளில் திமுக அமைச்சர், எம்.பி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை... பின்னணி என்ன?

post image

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று, தி.மு.க அமைச்சரின் நண்பர்கள் வீடுகளிலும், தி.மு.க எம்.பி-யின் நிறுவன அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. பணமோசடி வழக்கில் சிறையிலிருந்து ஓராண்டுக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அமைச்சரான செந்தில்பாலாஜியின் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறை

மறுபக்கம், சென்னை தியாகராய நகரில் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் அக்கார்ட் டிஸ்டில்லர்ஸ் அண்ட் பிரேவர்ஸ் என்ற மதுபான நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், எஸ்.என்.ஜே குரூப்பின் மதுபான நிறுவன அலுவலகத்திலும் இந்த அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.

அக்கார்ட் டிஸ்டில்லர்ஸ் அண்ட் பிரேவர்ஸ்

அதேபோல், எழும்பூரில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பதாகவும், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரே நாளில், தி.மு.க அமைச்சரின் நண்பர்களின் வீடுகள், அந்த அமைச்சர் முன்பு கவனித்து வந்த துறை சார்ந்த அலுவலகம் மற்றும் தி.மு.க எம்.பி-யின் மதுபான நிறுவனத்தின் அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது பேசுபொருளாகியிருக்கிறது. இருப்பினும், அமலாக்கத்துறை தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிக்கை வெளியான பிறகு எந்தெந்த காரணங்களின் பின்னணியில் இந்த இடங்களில் சோதனை நடைபெற்றிருக்கிறது என்பது தெரியவரும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Ooty: இந்த சம்மருக்கு ஊட்டி போறீங்களா? சிறப்பு மலை ரயில்கள் அறிவிப்பு; எந்தெந்த நாட்களில் தெரியுமா?

சுவிட்சர்லாந்து தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜின்கள் நீலகிரியில் நூற்றாண்டுகளைக் கடந்தும் இயங்கி வருகின்றன. யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய அந்தஸ்தைப் பெற்ற இந்த மலை ரயிலில் பயணிக்க உலக... மேலும் பார்க்க

போரில் அழிக்கப்பட்ட காஸா நகரம்: இடிபாடுகளுக்கு நடுவே இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா காஸா மேலும் பார்க்க

TVK: ஒரு நாள் நோன்பு இருக்கும் விஜய்; சென்னையில் பரபரக்கும் தவெக - இஃப்தார் நிகழ்ச்சி அப்டேட்ஸ்

தவெக சார்பில் இராயப்பேட்டை YMCA மைதானத்தில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நாளை மாலை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு நாள் நோன்பு இருக்கும் முடிவில் விஜய் இருக்கி... மேலும் பார்க்க

Jaishankar : லண்டன் பயணத்தில் பாதுகாப்பு அத்துமீறல்; காலிஸ்தானி குழுக்களுக்கு இந்தியா கண்டனம்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்துக்கு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு அத்துமீறலுக்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. The British almost allowed an att... மேலும் பார்க்க

'உங்களால் தான் அமெரிக்காவில் நிறைய மக்கள் இறந்துள்ளனர்...' - ட்ரூடோவிடம் போனில் பேசிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பும், பின்பும் ட்ரம்ப் கடுமையாக சாடி வந்த நாடுகளில் ஒன்று, கனடா. ஒருகட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு வார்த்தை போர்கூட நடந்தது. இ... மேலும் பார்க்க

"உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஆளுநர்தான்" - அமைச்சர் கோ.வி.செழியன் தாக்கு

ஈரோட்டில் உள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்க... மேலும் பார்க்க