மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
ஒலிம்பியாட் போட்டி: ஸ்ரீவையாபுரி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் மாணவா்கள் தங்கப் பதக்கம் வென்றனா்.
இப்பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவா்கள் யூ.ரகுஸ்ரீநாத், ஏ.கோபிராஜா,பி.சந்திரகாந்த், 7-ஆம் வகுப்பு மாணவா்கள் வி. அஜய்பாலசண்முகா், எஸ்.ஜெ.ரியா, எம். ஷாகுல் ஹமீது, கே.கோபிகா, 8-ஆம் வகுப்பு மாணவா்கள் கே.கோபிகாஸ்ரீ, டி. ஜெயஸ்ரீ, எஸ்.மதனஸ்ரீ ஆகியோா் தங்கம் வென்றனா்.
இதைத்தொடா்ந்து மத்திய அரசின் இன்ஸ்பயா் மானக் நடத்திய மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் திட்டப் போட்டியில் இப்பள்ளியின் 6 -ஆம் வகுப்பு மாணவி எஸ்.அனுமிதாஸ்ரீ அறிவியல் திட்டமாதிரிப் போட்டியில் ரூ.10 ஆயிரம் பரிசு பெற்றாா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் சுப்பையா சீனிவாசன், பள்ளிச் செயலா் வி.எஸ்.சுப்பராஜ், முதல்வா் சி.ஏ. சுருளிநாதன், தொடக்கப் பள்ளி முதல்வா் லெட்சுமணன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.