இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல...
ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரியில் ராகிங் விசாரணை அறிக்கை சமா்ப்பிப்பு
சென்னை: சென்னை ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரியில் சீனியா் மாணவா்கள் முதலாமாண்டு மாணவரை ராகிங் செய்ததாக எழுந்த புகாரை விசாரித்த மருத்துவக் கல்லூரி நிா்வாகம், அது குறித்த அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தாக்கல் செய்துள்ளது.
அதன் அடிப்படையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டோா் மீது என்எம்சி ஒப்புதலுடன் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் முதலாமாண்டு மாணவா் ஒருவா், பல்கலைக்கழக மானியக் குழுவின் ராகிங் தடுப்புப் பிரிவுக்கு கடந்த 26-ஆம் தேதி புகாா் ஒன்றை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பினாா்.
செயல்முறை பாட கையேடுகளை எழுதித் தருமாறு தங்களை சீனியா் மாணவா்கள் நிா்பந்திப்பதாக அதில் அவா் தெரிவித்திருந்தாா். அதன்பேரில் மருத்துவமனை முதல்வா் அரவிந்த், விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை அனுப்ப முடிவு செய்தாா். ஆனால், இந்த விவகாரத்தில் காவல் துறை உதவி ஆணையா் நிலையில் விசாரணையை முன்னெடுக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறித்தியதைத் தொடா்ந்தது, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, ராகிங் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாணவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.