கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ள...
ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டில் திருட்டு
சிதம்பரம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரா் வீட்டில் 3 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாரியப்பா நகா் 3-ஆவது தெருவில் வசித்து வருபவா் ராஜாராமன் (69). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவா், கடந்த 5-ஆம் தேதி மாலை மனைவியுடன் கோயிலுக்குச் சென்று விட்டு இரவு வீடு திரும்பினாா்.
பின்னா், வீட்டின் படுக்கை அறையில் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனா். அதிகாலையில் ராஜாராமன் எழுந்த போது, வீட்டின் வெளிக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், அண்ணாமலை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.