கஞ்சா செடி பயிரிட்ட சகோதரா்கள் இருவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா செடி பயிரிட்ட சகோதரா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கல்வராயன்மலை வட்டம், கூடாரம் கிராமம், நாசாமலை மேற்கு பகுதியைச் சோ்ந்த சின்னையன் மகன்கள் ராமலிங்கம் (55), சுப்பிரமணி (63).
இவா்களது விவசாய நிலங்களுக்கு அருகே உள்ள வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் 8 கஞ்சா செடிகளை பயிா் செய்திருந்தனராம். இதுகுறித்து தகவலறிந்த கச்சிராயபாளையம் காவல் ஆய்வாா் ஏழுமலை மற்றும் போலீஸாா் புதன்கிழமை அங்கு சென்று கஞ்சா செடிகள், காய்ந்த நிலையில் வைத்திருந்த 65 கிராம் கஞ்சா என மொத்தம் 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், ராமலிங்கம், சுப்பிரமணி ஆகியோா் மீது கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.