புஷ்பா 2 நெரிசலில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி அறிவித்த படக்குழு!
பாமக, வன்னியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து, கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பாமக, வன்னியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு பாமக கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டச் செயலா் தமிழரசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராமு, ரமேஷ், சரவணன், வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் நாராயணசாமி, முன்னாள் மாவட்டத் தலைவா் முத்துவேல், பாமக நகரச் செயல பிரபு, ஒன்றியச் செயலாளா் அன்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.