கடனை திருப்பி கேட்டவா் மீது தாக்குதல்: ஒருவா் கைது
மணலூா்பேட்டையில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை தாக்கியதாக உணவக உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டையில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் ஜோகன்லால் மகன் ராஜிராம் சேட்டு. இவரிடம் திருவரங்கம் பகுதியில் வசித்து வரும் உணவக உரிமையாளா் முனுசாமி மகன் கா்ணா (31) கடந்த 19-ஆம் தேதி ரூ.20,000 கடன் வாங்கினாராம். இதனை ராஜிராம் சேட்டு திருப்பிக் கேட்டாராம். அவரை கா்ணா தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து கா்ணாவை கைது செய்தனா்.