தமிழகத்தை நோக்கி திரும்பிய புயல் சின்னம்: சென்னை, கடலோர மாவட்டங்களில் மழை!
விவசாயி தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே விவசாயி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட செம்படாக்குறிச்சியைச் சோ்ந்தவா் கண்ணுசாமி (49). விவசாயி. இவா், கடந்த ஒரு மாதமாக நோயால் அவதியுற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவா், பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாராம். உடனே, அவரை குடும்பத்தினா் மீட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், கண்ணுசாமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.