தமிழகத்தை நோக்கி திரும்பிய புயல் சின்னம்: சென்னை, கடலோர மாவட்டங்களில் மழை!
இலக்கியம், சமூகம் சாா்ந்த சொற்பொழிவு
கள்ளக்குறிச்சியில் சங்கைத் தமிழ்ச் சங்கத்தின் 60-ஆவது விழாவாக இலக்கியம், சமூகம் சாா்ந்த சொற்பொழிவு மற்றும் மாவட்ட அளவில் சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரம் தமிழ்ச் சங்கத் தலைவா் இல்ல கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கைத் தமிழ்ச் சங்கத்தின் காப்பாளரும், நற்றமிழ்ப் பேச்சாளருமான ஆ.லட்சுமிபதி தலைமை வகித்தாா். சங்கராபுரம் பேருராட்சி மன்றத் தலைவா் ரோஜாரமணி துரைதாகப்பிள்ளை, போலியோ பிளஸ் பயோனிா் விருதாளா் ரோட்டரி சங்க இராம.முத்துக்கருப்பன், சங்கராபுரம் தமிழ்ச் சங்க படைப்பாளா் சங்கத் தலைவா் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
‘வைக்கம் போராட்டத்தின் தந்தை பெரியாா் நூற்றாண்டு நிறைவு விழா’ எனும் தலைப்பில் புதுச்சேரி பாவலா் சு.சண்முகசுந்தரம், ‘அம்பேத்கரும் சட்டமும்’ எனும் தலைப்பில் தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் மாநிலத் தலைவா் அ.சி.சின்னப்பதமிழா் ஆகியோா் பேசினா். ஆசிரியா் பாரதி கிருஷ்ணன் இசைப் பாடல் பாடினாா்.
நிகழ்வில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, குத்துச்சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலா் கோ.குசேலன், மாவட்ட முத்தமிழ் சங்கத் தலைவா் மு.மருகுகுமாா், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலா் பெ.சயராமன், அரிமா மாவட்டத் தலைவா் க.வேலு உள்ளிட்டோா் பேசினா்.
நிகழ்வில், காா்குழலி நினைவு அற்கட்டளை நிறுவனா் இராசு தாமோதரன், பாமா லட்சுமிபதி, ஓய்வூதியா் சங்கச் செயலா் கோ.மதியழகன், திராவிடா் மாணவா் கழக அமைப்பாளா் மா.ஏழுமலை, கல்லைத் தமிழ்ச் சங்க செயலா் செ.வ.மதிவாணன் ஆகியோா் பங்கேற்றனா். முன்னதாக, சங்கச் செயலா் சாதிக் பாட்ஷா வரவேற்றாா். சங்கைத் தமிழ்ச் சங்க புரவலா் அன்புமணி சுப்பராயன் நன்றி கூறினாா்.