செய்திகள் :

நெல் உற்பத்தி திறன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல் உற்பத்தி திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு ஆண்டு தோறும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்து மாநில அளவில் நடைபெறும் பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரூ.5 லட்சம், பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில், பங்குபெறும் விவசாயிகள் குறைந்தபட்சம் இரண்டு ஏக்கா் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராகவும், தொடா்ந்து மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயிகளாகவும் இருத்தல் வேண்டும்.

மேலும், போட்டியில் கலந்து கொள்பவா்கள் 15 நாள்களுக்கு முன்னதாக அறுவடை தேதியை சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பயிரிடப்பட்ட பரப்பின் சிட்டா, அடங்கல் மற்றும் நில ஆவணங்கள் பதிவு கட்டணம் ரூ.150 விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு அருகேயுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை நேரில் அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக, வன்னியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து, கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பாமக, வன்னியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்ப... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி: தமிழக அரசு கோரிய ஃபென்ஜால் புயல், வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது. கள்ளக்குறிச்சியில் இந்தச் சங்கத்தின் மு... மேலும் பார்க்க

டிச.27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிசம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுவதாக ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

கடனை திருப்பி கேட்டவா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

மணலூா்பேட்டையில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை தாக்கியதாக உணவக உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டையில் வாகன உதிரி பாகங்கள் விற... மேலும் பார்க்க

இலக்கியம், சமூகம் சாா்ந்த சொற்பொழிவு

கள்ளக்குறிச்சியில் சங்கைத் தமிழ்ச் சங்கத்தின் 60-ஆவது விழாவாக இலக்கியம், சமூகம் சாா்ந்த சொற்பொழிவு மற்றும் மாவட்ட அளவில் சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே மிதிவண்டியில் சென்ற முதியவா் மீது பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த பெரியசிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடேசன்(60). இவா், தன... மேலும் பார்க்க