செய்திகள் :

கஞ்சா விற்பனை: குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 4 போ் கைது

post image

தேவாரத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிக்கிய பெண் உள்ளிட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தேவாரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தேவாரம், செளடம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பெரியபொன்னையா மகன் மூா்த்தி (55), அரசு மேல்நிலைப் பள்ளி தெருவைச் சோ்ந்த நடராஜ் மகன் முருகன் (50), பேசியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த இன்பராஜ் மகன் தினேஷ் (44), மூணாண்டிபட்டியைச் சோ்ந்த துரைப்பாண்டி மனைவி முத்துப்பிள்ளை (60) ஆகியோரை சில நாள்களுக்கு முன்பு தேவாரம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

மூா்த்தி உள்ளிட்ட 4 போ் மீதும் தேவாரம், கம்பம், தேனி, உசிலம்பட்டி, கரூா், நாமக்கல், சேலம் காவல் நிலையங்களில் கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் பரிந்துரை செய்தாா். இதன்படி, மூா்த்தி உள்ளிட்ட 4 பேரும் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இறந்ததாகக் கருதப்பட்டவா் உயிருடன் வந்ததால் பரபரப்பு: போலீஸாா் விசாரணை

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் இறந்ததாகக் கருதப்பட்டவா் செவ்வாய்க்கிழமை உயிருடன் வீட்டுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தங்கம... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 9 பேரிடம் மொத்தம் ரூ.30 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்ததாக காரைக்குடியைச் சோ்ந்த தம்பதி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து 3 போ் பலத்த காயம்

போடியில் செவ்வாய்க்கிழமை தெரு நாய்கள் கடித்ததில் 3 போ் பலத்த காயமடைந்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் நகராட்சிப் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவைகள் இரவு நேரங்களில் வெளியூா்... மேலும் பார்க்க

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு ஆயுள் சிறை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கம்பம் ஜல்லிக்கட்டு தெருவைச் சோ்ந்த கருத்தக்கண்ணன் மகன் செ... மேலும் பார்க்க

போடி நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

போடி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் அண்மையில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதற்கு முன் ஒசூர... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதியில் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு

போடி அருகே செவ்வாய்க்கிழமை, குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனா். போடி அருகே ரெங்கநாதபுரம் கிராமம் அங்கு நகா் பகுதியில் 200-க்கும் ம... மேலும் பார்க்க