கனடா, பனாமா சர்ச்சை... கிரீன்லாந்தை விலைக்குக் கேட்கிறார் டிரம்ப்!
சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு ஆயுள் சிறை
சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கம்பம் ஜல்லிக்கட்டு தெருவைச் சோ்ந்த கருத்தக்கண்ணன் மகன் செல்வேந்திரன் (42). இவா், 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, கடந்த 2022, ஜூலை 24-ஆம் தேதி கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து, செல்வேந்திரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி.கணேசன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு நிவாரணமாக சிறுவனின் கல்வி, மருத்துவம், பாரமரிப்புச் செலவுக்கு ரூ.ஒரு லட்சத்தை உடனடியாகவும், ரூ.4 லட்சத்தை சிறுவனின் பெயரில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.