செய்திகள் :

கடக ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்

post image
கடகத்தில் பிறந்த நீங்கள், துடிப்பானவர்; நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் - 25 குறிப்புகள் இங்கே!

1. உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள்.

2. காரியம் ஆகவேண்டும் என்றால் உங்கள் காலைப் பிடிப்பதும், கையைப்பிடிப்பதுமாக இருந்த நபர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வீண் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். 

3. சிலருக்கு அடிப்படை வசதிகள் பெருகும். பழுதான சாதனங் களை மாற்றுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டு.

4. கணவன் - மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம்  உண்டு.  பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். 

5. நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. நெடுநாள்களாகத் திட்ட மிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது முடிவடையும்.

கடகம்

6. செவ்வாய் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், இனி வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். இழப்புகள் ஏமாற்றம் போன்ற பாதிப்புகள் விலகும்.

7. இதுவரை மனக்கலக்கத்துடன் சோர்ந்து கிடந்த நீங்கள், இனி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரைகுறை யாக நின்றுபோன வேலைகளெல்லாம் முழுமை யடையும்.

8. இந்தப் புத்தாண்டில் சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாகத் திகழும் நிலையில், வீண் கோபம் மனக்கலக்கம் ஏற்படலாம். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். 

9. குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் செல்லுமுன் கதவுகள் அனைத்தையும் மூடிவைப்பது, ஆபரணங்களைப் பாதுகாப்பாக வைப்பது, சமையலறையில் கேஸ் இணைப்பைச் சரியாக அணைத்துவைப்பது போன்ற விஷயங்களைக் கவனத்துடன் நடைமுறைப்படுத்துங்கள். வீட்டில் களவு போகவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, கவனம் தேவை. 

10. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் சொல்லி, ஆறுதல் தேட முற்படாதீர்கள்.  சிலருக்குத் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். பெரிய நோய்கான அறிகுறிகளெல்லாம் இருப்பதைப் போல் தோன்றும். வீண் அச்சம் வேண்டாம்.

11. ஆண்டு பிறப்பு முதல் 10.5.2025 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களின் செல்வம் - செல்வாக்குக் கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புது பதவிகள் தேடி வரும்.  

12. சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஓர் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

13. கல்யாணப் பேச்சு வார்த்தை, நல்லவிதத்தில் முடியும்.  வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

14. மே 11 முதல் வருடம் முடியும் வரை, குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால், வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாருக்காகவும் சாட்சிக் கையொப்பம் இடவேண்டாம்.

15. எதிர்பாராத பயணங்கள் உண்டு. உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். தூக்கம் குறையும். பழைய கடன், பகையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கடகம்

16. வியாபாரிகளே! கடையை விரிவுபடுத்தி, பெரிய முதலீடுகளைப் போட்டு நட்டப்பட்டீர்களே! இனி வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள்.

17. நீண்ட நாளாக மனதில் நினைத்திருந்த மாற்றங்களை இப்போது உடனடியாகச் செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

18. கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். எதிலும் உங்கள் அனுபவ அறிவைப் பயன்படுத்துங்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள்.

19. மெடிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைக ளால் ஆதாயம் உண்டு. பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

20. உத்தியோகஸ்தர்களே! உங்களுக்கு எதிரான மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப்போன பதவியுயர்வு, சம்பள உயர்வுகள் தடையில்லாமல் கிடைக்கும். 

21. அலுவலகத்தில் தேவையில்லாத பேச்சுகளைத் தவிர்க்கவும். மற்றவர் விஷயங்களிலும் தலையிடவேண்டாம். சக ஊழியர்களில் சிலர், உங்களைப் பற்றி மேலதிகாரியிடம் குறை கூறுவார்கள். அலுவலகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் உஷாராக இருங்கள்.

22. கணினித் துறையினரே! உங்களில் சிலர், தற்போது பணி புரியும் அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலத்திற்கு மாற்றப் படுவீர்கள்; சம்பளம் உயரும்.

குருப்பெயர்ச்சி கடகம்

23. சொத்துக்கள் சேரும் காலம் இது. எனினும், ஆவணங்களைச் சரிபார்த்து முன்பணம் கொடுங்கள். சேமிப்புகள் உயர வாய்ப்பு உண்டு. 

24. வீட்டில் சில சுபகாரியங்களில் தாமதம் ஏற்பட்டாலும் நிறைவில் சுபமுடிவுகளே ஏற்படும். வயதில் மூத்த பெண்மணிகளின் ஆலோசனை, உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். 

25. தீர்த்தச் சிறப்புமிக்க தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வாருங்கள். மாதம்தோறும் குலதெய்வத்துக்குச் சிறப்பு வழிபாடு செய்யுங்கள்; நடப்பதெல்லாம் நன்மையாகும்!

2025 -ல் என்ன நடக்கும்? `போர், எழுச்சிபெறும் நாடு..' - ஒரே மாதிரி கணித்த பாபா வாங்கா, நாஸ்ட்ராடமஸ்

2025ம் ஆண்டு பிறக்கிறது. ஒவ்வொரு வருட பிறப்பிலும் இந்த ஆண்டு நமக்கு ராசியானதாக அமையுமா என்பதை ஜோதிடம் பார்த்து அறிந்துகொள்ள விரும்புவர். இதேப்போல மொத்த உலகத்துக்கும் ஜோதிடம் சொன்ன தீர்க்கதரிசிகள் உள்ள... மேலும் பார்க்க

ஷெல்வீ | 2025 - மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் | Shelvi New Year Rasi palan

ஜோதிடர் ஷெல்வி கணித்துச் சொல்லும் 2025 - ம் ஆண்டு 12 ராசிகளுக்குமான பலன்கள்... பரிகாரங்கள். மேலும் பார்க்க

January Rasipalan ? | 12 ராசிகளுக்கும் பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட தேதிகள் ? | ஜனவரி 2025

ஜனவரி மாதத்துக்கான 12 ராசிகளுக்குமான பலன்களை அதிர்ஷ்டத் தேதிகளோடு கணித்துச் சொல்கிறார் பாரதி ஶ்ரீதர். மேலும் பார்க்க

விருச்சிக ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்

விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் சகல அனுபவமும் பெற்றவர்; விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்டவர். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணி... மேலும் பார்க்க

மகர ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்

மகர ராசியில் பிறந்த நீங்கள், அன்பால் அனைவரையும் அரவணைப்பவர். உதவும் குணம் நிறைந்தவர். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் - 25 குறிப்புகள் இங... மேலும் பார்க்க

ரிஷப ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்

ரிஷபத்தில் பிறந்த நீங்கள் மற்றவரின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயல்படுபவர். பொதுநலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லி... மேலும் பார்க்க