தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: ரூ.675 கோடியில் 102 கூட்டு குடிநீர் திட்ட பணிகள்...
கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
வால்பாறையில் கடும் வறட்சி நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் எளிதாக தீப்பற்றக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என வனத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வால்பாறை வட்டாரத்தில் கடும் வெயில் காரணமாக வெப்பம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான நீரோடைகள் வடு காணப்படுகின்றன. வால்பாறையில் உள்ள அய்யா்பாடி, ரொட்டிக்கடை பாறைமேடு, அக்காமலை புல்மேடு ஆகிய பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும் சமயத்தில் புற்கள் மற்றும் செடிகளில் தீப்பிடித்து காட்டுத் தீயாக பரவி வருகிறது.
வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரும் வழியில் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்வது, புகைப் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் மூலம் காய்ந்த செடிகளில் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது.
எனவே, வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தவிா்க்க வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என வனத் துறையினா் எச்சரித்து வருகின்றனா்.