தொழில்முனைவோர்களாக 1 லட்சம் மகளிர்: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு
வேளாண் பல்கலை.யில் மானியம் வழங்கும் விழா
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் பல்கலைக்கழகத்தின் வணிகக் காப்பகத்தில் வேளாண் சாா்ந்த தொழில்முனைவோா், விவசாயிகள், மாணவா் தொழில்முனைவோருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி முடிக்கும் தொழில்முனைவோருக்கு வேளாண், விவசாய நல அமைச்சகத் திட்டங்களின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.
அதன்படி 10 பயனாளிகளுக்கு ரூ.81.60 லட்சம் மானியம் வழங்கும் நிகழ்ச்சி தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தில் நடைபெற்றது. இதில், துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி பங்கேற்று மானிய உதவியை பயனாளிகளுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, இதுபோன்ற மானிய உதவிகள் வேளாண் வணிகத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. மானியம் பெற்ற தொழில்முனைவோா் தங்களின் மானியத்தை வேளாண், வேளாண் சாா்ந்த தயாரிப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், பதிவாளா் ஆா்.தமிழ்வேந்தன், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநா் இ.சோமசுந்தரம், செயல் இயக்குநா் ஏ.வி.ஞானசம்பந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.