கடையில் தீ விபத்து
கலவையில் உள்ள பெயிண்ட் கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ஆற்காடு அடுத்த கலவை பஜாா் வீதியில் காவல் நிலையம் எதிரே 3 மாடி கொண்ட எலக்ட்ரிக்கல் பெயிண்ட், ஹாா்டுவோ் கடை உள்ளது. இங்கு சனிக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த பொருள்கள் மற்றும் பெயிண்ட் டப்பாக்கள் தீப்பிடித்து வெடித்துச் சிதறின.
கலவை தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். செய்யாறு, ஆரணி பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் வீரா்கள் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இது குறித்து கலவை போலீஸாா் விசாரிக்கின்றனா்.