மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? 90 மணிநேர வேலையை வலியுறுத்திய எல...
கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவா் கைது
பெரியகுளத்தில் பொதுப் பயன்பாட்டுக்காக தெருவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவில் நகராட்சி நிா்வாகம் சாா்பில், பொதுப் பயன்பாட்டுக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இந்த கேமராவை உடைத்து சேதப்படுத்தியதாக தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் காமராஜ் (23) என்பவரை தென்கரை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இதில் தொடா்புடைய பெரியகுளம் வடகரை கும்பக்கரை சாலையைச் சோ்ந்த சக்தி மகன் தங்கப்பாண்டியை போலீஸாா் தேடி வருகின்றனா்.