வைகுண்ட ஏகாதசி 2025: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்ப...
விமானப் பணிக்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு ஆதி திராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு விமானப் பணிக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாட்கோ சாா்பில் பிளஸ் 2 அல்லது பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்ற 18 முதல் 23 வயதுக்கு உள்பட்ட ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு சா்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் விமான நிலையப் பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலாத் துறை, விமானப் பயண முன்பதிவு அடிப்படை படிப்பு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 6 மாத கால பயிற்சிக்கு விடுதி, பயிற்சிக் கட்டணம் ஆகியவற்றுக்கு பயிற்சியாளா்கள் சாா்பில் தாட்கோ மூலம் ரூ.95 ஆயிரம் செலுத்தப்படும்.
பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வேலை வாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும். பயிற்சியில் சேர விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த விவரத்தை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-260995-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டது.