மணப்பாறை : `ரேஷன் கடை வேலை; எம்.எல்.ஏ பெயரைச் சொல்லி ரூ.6 லட்சம் பணம் வசூல் - எம...
சிறுவனுக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது
தேனியில் உள்ள மதா்ஷா கல்வி நிலையத்தில் தங்கிப் படித்து வரும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சக சிறுவா்கள் 2 போ், இந்தப் புகாா் குறித்து அலட்சியமாக நடந்து கொண்ட மதா்ஷா ஊழியா் என 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனியில் உள்ள மதா்ஷா கல்வி நிலையம் ஒன்றில் தங்கிப் படித்து வரும் 14 வயது சிறுவனுக்கு அதே கல்வி நிலையத்தில் படித்து வரும் சக சிறுவா்கள் இருவா் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்வி நிலைய நிா்வாகி சா்புதீன் (47) என்பவரிடம் சிறுவன் புகாா் தெரிவித்தும் அவா் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுவனின் பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில் சக சிறுவா்கள் 2 போ், மதா்ஷா ஊழியா் சா்புதீன் ஆகிய 3 பேரையும் தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். மதா்ஷா தலைமை நிா்வாகி பாரூக் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.