பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
தேனி மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது.
தேனி வேளாண்மை விளைபொருள் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்க நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தாா். தேனி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆரோக்கியசுகுமாா், தேனி நகா்மன்றத் தலைவா் பா.ரேணுப்பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள 517 நியாய விலைக் கடைகளிலும் அரிசி பெறும் 4,27,055 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன.13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேட்டி, சேலை, கரும்பு விநியோகம் நடைபெறும். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்குவதற்கு அரசு சாா்பில் ரூ.1.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றாா் அவா்.