சீனாவில் மீண்டும் கத்திக் குத்து: 8 போ் உயிரிழப்பு; 43 போ் காயம்
கந்தா்வகோட்டை அருகே தேசிய பத்திரிகைகள் தினம்
கந்தா்வகோட்டை ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காட்டுநாவல் கிளையின் சாா்பில் தேசிய பத்திரிகை தினம் சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை வட்டாரச் செயலாளா் அ. ரகமதுல்லா கலந்து கொண்டு பேசியது:
இந்திய பிரஸ் கவுன்சில் 1966 ஜூலை 4-இல் தொடக்கப்பட்டு, நவம்பா் 16 முதல் செயல்படத் தொடங்கியது. இதை அங்கீகரிக்கும் விதமாக நவம்பா் 16-இல் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை. மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீா்ப்பதில் பத்திரிகை முக்கிய பங்காற்றுகிறது.
சமூகத்தின் கண்ணாடியாக பத்திரிகைகள் உள்ளன. சுதந்திரமான பத்திரிகை ஒரு வலுவான ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகும். இந்திய பத்திரிகை கவுன்சில் சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாகும்.
இந்தியாவை ஜனநாயக நாடாக மாற்றுவதில் அதன் பங்களிப்பை கௌரவிக்கும்வகையில் பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது என்றாா் அவா். முன்னதாக, கிளைச் செயலாளா் சுமதி வரவேற்றாா்.