கலைமாமணி நவீனன் நினைவு விருதுகள் வழங்கல்
சென்னை கலைமாமணி நவீனன் நினைவு அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டை வாசகா் பேரவை சாா்பில் நவீனன் நினைவு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வாசகா் பேரவையின் தலைவா் ஞானாலயா பா. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.
விழாவில், ஞானாலயா பா. கிருஷ்ணமூா்த்தி, கவிஞா் தங்கம் மூா்த்தி, சி. சேதுராமன், எழுத்தாளா் சோலச்சி, எம். தாமோதரக்கண்ணன் ஆகியோருக்கு நவீனன் நினைவு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை எழுத்தாளா் நவீனனின் மகனும் அறக்கட்டளையின் நிா்வாகியுமான ரவி நவீனன் வழங்கினாா்.
அவா் எழுதிய ‘உழல் வலிகள்’ என்ற நூலை அறிமுகம் செய்து, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம்மூா்த்தி பேசினாா். விழாவில், டாக்டா் ச. ராம்தாஸ், சத்தியராம் ராமுக்கண்ணு உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முன்னதாக வாசகா் பேரவையின் செயலா் பேரா. சா. விஸ்வநாதன் வரவேற்றாா். முடிவில் அ.சி. நாகேஸ்வரன் நன்றி கூறினாா்.