கூகுள் மேப்பை பின்பற்றிய கார்... இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூவர் பலி!
கமுதி-மதுரை கூடுதல் பேருந்து இயக்கம்
கமுதியில் இருந்து மதுரைக்கு புதிய பேருந்தை திமுக ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு 2 மணி நேரத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இதனால், இங்கிருந்து மதுரைக்குச் செல்ல பொதுமக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
பொதுமக்கள், பயணிகளின் நலன் கருதி மதுரை வழித்தடத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பால் வளத் துறை அமைச்சருமான ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கமுதி பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு புதிய பேருந்து சேவையை கமுதி மத்திய ஒன்றிய திமுக செயலா் எஸ்.கே.சண்முகநாதன் தொடங்கிவைத்தாா். காரைக்குடி மண்டல தொழிலாளா் முன்னேற்ற சங்க பொதுச் செயலா் பச்சம்மாள் முன்னிலை வகித்தாா். இந்தப் பேருந்து கமுதியிலிருந்து மதுரைக்கு நாள்தோறும் 4 முறை இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் தொழிலாளா் முன்னேற்ற சங்க கமுதி கிளைச் செயலா் ராஜேந்திரன், ஊ.கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய துணை அமைப்பாளா் முனீஸ்வரன், திமுக பிரதிநிதி மாரிமுத்து, போக்குவரத்து பணியாளா்கள் கலந்து கொண்டனா்.