15,000 பேர்! அரசு வேலைக்கு இணையான விண்ணப்பங்கள்... டிராகன் இயக்குநர் அதிர்ச்சி!
கம்பத்தில் மாட்டுவண்டி பந்தயம்
தேனி மாவட்டம், கம்பத்தில் ஸ்ரீகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி 5-ஆம் ஆண்டாக இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பெரியமாடு, கரிச்சான் , பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான், முயல்சிட்டு ஆகிய பிரிவுகளில் 150- க்கும் அதிகமான மாடுகள் பங்கேற்றன. 7 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கம்பம் மெட்டுச் சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை காண கம்பம், கடலூா், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பாா்வையாளா்கள் வந்திருந்தனா். கம்பம் போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா்.