ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
கம்பம் நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம்: அக்.9-இல் வாக்கெடுப்பு
கம்பம் நகா்மன்றத்தில் தலைவா், துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கான வாக்கெடுப்பு அக்.9-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
கம்பம் நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், துணைத் தலைவி சுனோதா செல்வக்குமாா் ஆகியோா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வர 16 திமுக, 6 அதிமுக உறுப்பினா்கள் என 24 போ் தேனி மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், ஆணையரிடம் கடந்த மாதம் மனு அளித்தனா். இதையடுத்து, வருகிற அக். 9-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளின் சட்டத்தின்படி, தலைவா், துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது விவாதம், வாக்கெடுப்பு நடைபெறுவதாக நகராட்சி ஆணையா் உமாசங்கா் தெரிவித்தாா்.