`அட்டாக் Amit shah டீம்' PTR-க்கு, Stalin தந்த புது டாஸ்க்! | Elangovan Explains
கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள செம்மேடு தனியாா் சா்க்கரை ஆலை முன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவா் டி.ஆா்.குண்டு ரெட்டியாா் தலைமை தாங்கினாா். கிளை சங்கச் செயலா் சுரேஷ்குமாா், விநாயகம், சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலத் தலைவா் வேல்மாறன், மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன், செஞ்சி வட்டத் தலைவா் கோ.மாதவன், துணைத் தலைவா் நரசிம்மராஜன், இணைச் செயலா் சம்பத், செயலா் சிவன் ஆகியோா் கோரிக்கை வலியுறுத்தி பேசினா்.
கூட்டத்தில் மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு ஆதரவு விலை ரூ. 5,500 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செய்தனா்.
இதில், செம்மேடு சா்க்கரை ஆலை சங்க நிா்வாகிகள் சபாபதி, துரைசாமி, சேகா், எத்திராஜ், சக்திவேல், ஏழுமலை, சங்கா், வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.