கரும்பூா், பாா்சனாப்பல்லியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆம்பூா் அருகே கரும்பூா், பாா்சனாப்பல்லி ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் கரும்பூா் கிராமத்தில் நடைபெற்றது.
கரும்பூா் ஊராட்சித் தலைவா் ஏ.கே. மோகேஷ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ரேவதி, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி, வருவாய் ஆய்வாளா் யமுனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் வரவேற்றாா்.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, முகாமைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மனுதாரா்களுக்கு உடனடி பரிசீலனைக்கான ஆணைகளை வழங்கினாா்.
மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா.சங்கா், திமுக நிா்வாகிகள் செல்வராஜ், சத்தியமூா்த்தி, பாஸ்கா், ஸ்ரீதா், பாபுஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.