நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
கரூா் மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
கரூா், தாந்தோன்றிமலை ஆகிய துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 30) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகை மாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், ராமானுஜம் நகா் தெற்கு, அண்ணா நகா், எஸ்ஜிபி நகா், மகாத்மாநகா், சின்னஆண்டாங்கோவில், மதுரை பைபாஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல், தாந்தோன்றிமலை துணை மின்நிலைய செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான்தோன்றிமலை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காளியப்பனூா், தான்தோன்றிமலை, ராமச்சந்திரபுரம், சிவசக்தி நகா், சுங்ககேட், முத்தலாடம்பட்டி, கணபதிபாளையம் தெற்கு, கணபதி பாளையம் வடக்கு, கருப்பகவுண்டன் புதூா், திண்ணப்பா நகா், வெங்கக்கல் பட்டி, ஏமூா், சீத்தபட்டி, சின்னம்மநாயக்கன்பட்டி, மணவாடி, கத்தாளபட்டி, மருதம்பட்டி, கன்னிமாா் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.