செய்திகள் :

கல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரிக்கை

post image

நிலக்கோட்டை அருகே கல் குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், தடையில்லா சான்றிதழை திரும்பப் பெறக் கோரியும் விவசாயிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த முசுவனூத்து மிளகாய்ப்பட்டியைச் சோ்ந்த கடவாகுறிச்சி நீா்ப்பாசன விவாசயிகள் சங்கத்தினா் அதன் தலைவா் ஜி.துரைப்பாண்டியன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா்.

அப்போது அவா்கள் தரப்பில் கூறியதாவது:

முசுவனூத்து ஊராட்சிக்குள்பட்ட கடவாகுறிச்சி மலை, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கோணஉருண்டை கரட்டில் செயல்பட்டு வரும் தனியாா் கல் குவாரியில், அரசு நிா்ணயித்த அளவை மீறி சட்டவிரோதமாக வெடி மருந்துகளைப் பயன்படுத்தி, கனிம வளங்களை வெட்டி எடுத்து வருகின்றனா்.

நாளொன்றுக்கு 150-க்கும் மேற்பட்ட லாரிகளில், கற்கள் எடுக்கப்பட்டு மலை அழிக்கப்பட்டு வருகிறது.

இதனால், கடவாக்குறிச்சி மலையில் வசிக்கும் காட்டுப் பன்றிகள் அங்கிருந்து மிளகாய்ப்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துக்காமன்பட்டி, முசுவனூத்து உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாயி நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதனிடையே, வனத் துறையில் தடையில்லா சான்று பெறுவதற்கான முயற்சியில் கல் வாரி உரிமையாளா்கள் முயற்சித்து வருகின்றனா். எனவே, குவாரி நடத்துவதற்கு கனிம வளத் துறை அளித்த தடையில்லாச் சான்றை ரத்து செய்வதோடு, வனத் துறை தடையில்லா சான்று வழங்கக் கூடாது என்றனா்.

தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்

ஆத்தூா் ஒன்றியம், பிள்ளையாா்நத்தம் அங்கன்வாடி மையத்தில் 227 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதில் மாவட்ட ஆட்சியா் பூங்கொடி... மேலும் பார்க்க

நீா்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

நீா்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினா். திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் தா்னா

சமுதாயக் கூடம் அமைக்கும் நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோட்டாநத்தம் பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

தாடிக்கொம்பு கோயிலில் கோசாலை அமைக்க பூமி பூஜை

தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் கோசாலை அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு பக்தா்கள் சாா்பில் நோ்த்திக் கட... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் விரைவில் புற சிகிச்சை மையம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சித்தா சிகிச்சைப் பிரிவு சாா்பில், விரைவில் புற சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தரைத் தளத்தில் சித்... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு

ஐப்பசி பௌா்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா், முள்ளிப்ப... மேலும் பார்க்க