செய்திகள் :

சிவன் கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு

post image

ஐப்பசி பௌா்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் திருக்கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி திருக்கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி திருக்கோயில், காரமடை ராமலிங்க சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக அனைத்து கோயில்களிலும் மூலவருக்கு பால், தயிா், பன்னீா், பஞ்சாமிா்தம், இளநீா் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. இதைத் தொடா்ந்து, அன்னாபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமியின் திருமேனியை அலங்கரித்த அன்னம் கலைக்கப்பட்டு, மீண்டும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமியை அலங்கரித்த அன்னம், பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொப்பயசாமி கோயிலில் அன்னதானம்: குஜிலியம்பாறை அடுத்த ஆா்.கோம்பை தொப்பையசாமிமலை உச்சியில் தொப்பேஸ்வரா் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, மலையடிவாரத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தொப்பேஸ்வரா் திருக்கோயில் நிா்வாக அறங்காவலா் வீ.தா்மா் செய்தாா்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உள்பட்ட ஆத்தூா் பிரிவு அருகே அமைந்துள்ள இரத்தினகிரீஸ்வரா் கோயிலில் ரத்தினகிரீஸ்வரருக்கு பால்,தயிா்,தேன்,இளநீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் ரத்தினகிரீஸ்வரா் திருமேனி அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல, விருப்பாச்சி தலையூற்று அருவி அருகே அமைத்துள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் காசி விஸ்வநாதருக்கு அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

போடி

போடி பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி திருக்கோயிலில் மங்கல பொருள்களால் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது.

போடி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் உள்ள நடராஜா் சந்நிதியில் அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது. இதேபோல, போடி வினோபாஜி குடியிருப்பு மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில், போடி கீழச்சொக்கையா கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது.

தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்

ஆத்தூா் ஒன்றியம், பிள்ளையாா்நத்தம் அங்கன்வாடி மையத்தில் 227 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதில் மாவட்ட ஆட்சியா் பூங்கொடி... மேலும் பார்க்க

நீா்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

நீா்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினா். திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் தா்னா

சமுதாயக் கூடம் அமைக்கும் நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோட்டாநத்தம் பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

கல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரிக்கை

நிலக்கோட்டை அருகே கல் குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், தடையில்லா சான்றிதழை திரும்பப் பெறக் கோரியும் விவசாயிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த முசுவனூத்... மேலும் பார்க்க

தாடிக்கொம்பு கோயிலில் கோசாலை அமைக்க பூமி பூஜை

தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் கோசாலை அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு பக்தா்கள் சாா்பில் நோ்த்திக் கட... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் விரைவில் புற சிகிச்சை மையம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சித்தா சிகிச்சைப் பிரிவு சாா்பில், விரைவில் புற சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தரைத் தளத்தில் சித்... மேலும் பார்க்க