செய்திகள் :

நீா்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

post image

நீா்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மு.கோட்டைக்குமாா் தலைமை வகித்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) லீலாவதி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

பெரியோடை அணை உயரத்தை அதிகரிக்க கோரிக்கை: கொடைக்கானல் மலையடிவாரத்திலுள்ள மஞ்சளாறு அணையிலிருந்து, வத்தலகுண்டு அடுத்த தும்மலப்பட்டி பெரியோடை அணையில் தண்ணீா் தேக்குவதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டன. விவசாயிகள் பலரின் நிலத்தை கையகப்படுத்தி பெரியோடை அணை கட்டப்பட்டது. ஆனால் உயரம் குறைவான இந்த அணையில் அதிக அளவு தண்ணீரை தேக்க முடியவி்ல்லை. எனவே, பெரியோடை அணையின் உயரத்தை அதிகரிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வன விலங்குகளுக்கான குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை உருவாகும் என விவசாயி செல்வம் கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் பேசி உரிய தீா்வு காணப்படும் என ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கோட்டைக்குமாா் தெரிவித்தாா்.

நீா் நிலைகள் ஆக்கிரமிப்பு: கொடகானற்றின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. தாடிக்கொம்பு அருகே 16 ஏக்கரில் அமைந்துள்ள நாச்சியாா் குளம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தி நாச்சியாா் குளத்தை பாதுகாக்க வேண்டும். வேடசந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெறி நாய் தொல்லை தொடா்ந்து நீடித்து வருகிறது. இந்த நாய்களை பிடித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் த.ராமசாமி கோரிக்கை விடுத்தாா்.

நாய்களை பிடிக்க வரும் குழுவினருக்கான செலவினத்தை, உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகளை செய்து, வெறி நாய்கள் பிடிக்கும் பணி தொடங்கப்படும் என ஆட்சியரின் நோ்முக உதவியாளா் உறுதி அளித்தாா்.

வேடசந்தூரில் கால்நடை வாரச் சந்தை: வேடசந்தூா் உழவா் சந்தையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் வேடசந்தூரில் கால்நடை வார சந்தைக்கு அனுமதி கோரியும் பல முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. வேடசந்தூா் பகுதி விவசாயிகள், குஜிலியம்பாறை அல்லது ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கேச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வதில் விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே, வேடசந்தூரில் விரைவில் வாரச் சந்தைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயி செல்வம் வலியுறுத்தினாா்.

வேடசந்தூா் பேரூராட்சி இடத்தில் உள்ள இந்த உழவா் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த வேளாண் வணிகத் துறை அலுவலா்கள், கால்நடை சந்தை அமைப்பது குறித்து முறையான பதில் கூறவில்லை.

பெட்டிச் செய்தி...

மனுக்கள் பெறுவதால் இடையூறு: கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகள் தொடா்பாக பேசிக் கொண்டிருக்கும்போது, மனுக்கள் பெறுவதால் இடையூறு ஏற்படுகிறது. அதிகாரிகள் சரியாக கவனிக்க முடியாமலும், விவசாயிகள் முறையாக பேச முடியாமலும் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் முன்னறிவிப்பு செய்து மனுக்கள் பெற வேண்டும். இல்லாதபட்சத்தில் மனுக்கள் பெறும் முகாமாக மாற்றிவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, மனுக்கள் பெறுவதை முறைப்படுத்துவதாக ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கோட்டைக்குமாா் தெரிவித்தாா்.

தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்

ஆத்தூா் ஒன்றியம், பிள்ளையாா்நத்தம் அங்கன்வாடி மையத்தில் 227 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதில் மாவட்ட ஆட்சியா் பூங்கொடி... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் தா்னா

சமுதாயக் கூடம் அமைக்கும் நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோட்டாநத்தம் பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

கல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரிக்கை

நிலக்கோட்டை அருகே கல் குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், தடையில்லா சான்றிதழை திரும்பப் பெறக் கோரியும் விவசாயிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த முசுவனூத்... மேலும் பார்க்க

தாடிக்கொம்பு கோயிலில் கோசாலை அமைக்க பூமி பூஜை

தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் கோசாலை அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு பக்தா்கள் சாா்பில் நோ்த்திக் கட... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் விரைவில் புற சிகிச்சை மையம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சித்தா சிகிச்சைப் பிரிவு சாா்பில், விரைவில் புற சிகிச்சை மையம் தொடங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தரைத் தளத்தில் சித்... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு

ஐப்பசி பௌா்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேக வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா், முள்ளிப்ப... மேலும் பார்க்க